தமிழக செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் என்கின்ற கொளஞ்சி மணி(வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜோசப் மகன் லோகநாதன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கொளஞ்சி மணி அப்பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சென்ற, லோகநாதன் தனது தம்பி ஜெயகாந்தன்(28), உறவினர் சதீஷ்(31) மற்றும் சிலருடன் சேர்ந்து கொளஞ்சி மணியை கத்தியால் குத்தினார். இதில் அவரது குடல் சரிந்து வெளியே வந்தது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு