தமிழக செய்திகள்

பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது

பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது

தினத்தந்தி

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கையில் உருட்டுக்கட்டையை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதோடு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் அவர், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு சுரேஷ் (வயது 39) என்பதும் பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் பானாம்பட்டு பாதையில் வாலிபர் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். உடனே அவரை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர், விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடியான ஏசுதாஸ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஏசுதாசை போலீசார் கைது செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு