கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சிலம்ப போட்டியில் பங்கேற்க வந்த போது வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர்.

இதில் சில மாணவர்கள் வேளாங்கண்ணி கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடலில் குளித்து கொண்டிருந்த 3 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர். அதில் கடலில் மூழ்கிய திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை எத்திலோடு பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் விஷ்வா மற்றும் கொங்கம்பட்டி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மகன் வீரமலை ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இரு உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்