தமிழக செய்திகள்

நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கடலூர்,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது நோய் பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளும், 5 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளும் கடந்த 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு