தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஆம்பூர் டவுன் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைகாலனி பகுதியை சேர்ந்த வல்லரசன் (வயது 24), அரவிந்தன் (20) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை