தமிழக செய்திகள்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தலைமை காவலர் சந்திரன், அருள் ஆகியோர் அரக்கோணம் குருவராஜபேட்டை பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குருவராஜபேட்டை காந்திநகர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் 40 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அரக்கோணம் தாலுகா பழனி பேட்டை, ஏ.எம்.கண்டிகை சோமசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார்தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது