தமிழக செய்திகள்

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு கடத்தல்

குமரி மாவட்டத்தில் எல்லையோர பகுதிகள் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் எல்லையோர பகுதிகளில் சோதனை சாவடிகள் மற்றும் தனிப்படைகள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு மங்காடு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்றார்.

2 டன் அரிசி

உடனே போலீசார் தங்கள் வாகனத்தில் 5 கிலோ மீட்டர் துரத்தி சென்று காரை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியுடன் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை