தமிழக செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சைமன்காலனியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல், 

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார், தலைமையில் அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சைமன்காலனியில் வந்த போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். பின்னர் காரை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உடையார்விளை அரசு குடோனிலும், கார் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்