தமிழக செய்திகள்

சென்னை: அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பலி...!

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாத பழைய கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் இன்று இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதுரையை சேர்ந்த பிரியா என்பவர் உயிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்