தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி 2 பெண்கள் பலி

பட்டிவீரன்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பெண்கள் பலியாகினர்.

தினத்தந்தி

மோட்டார் சைக்கிள் மோதல்

பட்டிவீரன்பட்டி அண்ணா நகரை சேர்ந்த சுப்பையா மனைவி முத்துலட்சுமி (வயது 52). அதே பகுதியை சேர்ந்த ராமு என்பரின் மனைவி பிச்சையம்மாள் (65). இருவரும் நேற்று முன்தினம் பட்டிவீரன்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பட்டிவீரன்பட்டி-வத்தலக்குண்டு ரோட்டில் ஒரு சினிமா தியேட்டர் அருகே நடந்து வந்தனர். அப்போது அய்யம்பாளையத்தில் இருந்து எம்.வாடிபட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (36) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

2 பேர் பலி

இதில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த பிச்சையம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிச்சையம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை