தமிழக செய்திகள்

ஈரோட்டில் கல்குவாரியில் வெடி மருந்துகள் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பலி

ஈரோட்டில் கல்குவாரியில் வெடி மருந்துகள் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோட்டில் பவானி அருகே அந்தோணிபுரம் பகுதியில் கல்குவாரி ஒன்று கடந்த 2010ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு நிறைந்த பகுதிக்குள் கல்குவாரி அமைக்க கூடாது என்ற விதிகளை மீறி இந்த கல்குவாரி செயல்பட்டு வந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்குவாரியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணிபுரிந்து வந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்ட வெடி மருந்துகள் மின்னல் தாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்தன. இதில், பாறைகள் சரிந்து பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தன.

இந்த விபத்தில் செந்தில், ஆறுமுகம் ஆகிய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற தொழிலாளர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு