தமிழக செய்திகள்

மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி...!

மளிகைக்கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள மளிகைக்கடையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கொத்தனார் மணிகண்டன் மற்றும் அய்யப்பன் என்பவர் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டில் இருந்த விஷயாவு தாக்கி 2 பேரும் உள்ளேயே மயங்கி விழுந்து உள்ளனர்.

இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவர்கள் கழிவுநீர் தொட்டில் விஷயாவு தாக்கி கிடந்த 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இறுதியில் 2 தொழிலாளர்களும் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டனர். தற்போது 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்