தமிழக செய்திகள்

கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை

அணைப்பாளையம் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம் அணைப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் செயலாளர் காசிலிங்கம் மற்றும் காசாளர் மகபூப்பி ரூ.23 லட்சத்து 71 ஆயிரம் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, அப்போதைய செயலாளர் மற்றும் காசாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது அந்த வழக்கு முடிவுற்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.23 லட்சத்து 71 ஆயிரத்தை கையாடல் செய்த முன்னாள் செயலாளர் காசிலிங்கம் மற்றும் காசாளர் மகபூப்பி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?