தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

அரக்கோணம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தினத்தந்தி

அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்திநகர் திரவுபதி அம்மன் கோவில் பின் புறத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 21), வேடல் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கருணாகரன் (28) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை