தமிழக செய்திகள்

சிறுவாச்சூர் சந்தையில் ரூ.20 லட்சம் ஆடுகள் விற்பனை

சிறுவாச்சூர் சந்தையில் ரூ.20 லட்சம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆட்டுச்சந்தை நடந்தது. பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிந்தனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க முஸ்லிம்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடுகளை பேரம் பேசி வாங்கி சென்றனர். ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் சிறுவாச்சூரில் வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் மீண்டும் ஆட்டுச்சந்தை நடத்துமாறு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு