தமிழக செய்திகள்

ஜவுளி நிறுவனங்களுக்கு 20 சதவீதம் மானியம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாட்டின் ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 33 விழுக்காடாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற “ஜவுளி தொழில் மாநாடு 360”-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசியதாவது:-

ரூ.915 கோடி மதிப்பீட்டில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் 'ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2024' இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பைப் பற்றி உலக வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்; அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதுவே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

நாட்டின் ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 33 விழுக்காடாக உள்ளது. ஆயத்த ஆடைத் தொழிலில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மாநிலம் தமிழ்நாடுதான். ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்களை வாங்க 20% மூலதன மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்