தமிழக செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறுகிறது

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

மேட்டூர்,

கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிய நிலையில் விநாடிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட் கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முதன்முறையாக நிரம்பியது.

இதன்பின்னர் கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அதன்பின்னர் கடந்த 21ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டில் 3வது முறையாக அணை நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்த நிலையில் தண்ணீர் திறந்து விடுவது குறைந்துள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 20,742 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து