தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தினத்தந்தி

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமி கர்ப்பம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் காலனி தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அருள்தாசும், சிறுமியும் பலமுறை தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது. இதில் சிறுமி 8 மாதம் கர்ப்பம் அடைந்தார்.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, ஆசை வார்த்தை கூறி தன்னை அருள்தாஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் கடந்த 24.7.2014-ந் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அருள்தாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அருள்தாஸ் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை