கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஓரிரு வாரங்களில் முழுமையாக 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஓரிரு வாரங்களில் முழுமையாக 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மினி கிளினிக்குகள் தொடங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 980 மினி கிளினிக் பயன்பாட்டில் உள்ளதாகவும், ஓரிரு வாரங்களில் முழுமையாக 2,000 மினி கிளினிக்கள் திறக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் மினி கிளினிக்குகளுக்கு புதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் 2 வாரங்களில் நேரடியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, மாவட்ட சுகாதார மையம் மூலமாக நியமிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்