தமிழக செய்திகள்

தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வை புதிய பாடத்திட்டத்தில் தான் எழுதமுடியும்

2018-19-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும், 2019-20-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை,

மார்ச் 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வுகளுக்கு வருகை புரியாதவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகளில் எழுதி கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக் குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி