கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில்கள் பராமரிப்பு பணிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தம்

ரெயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினத்தந்தி

சென்னை,

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 1-ன் கீழ், கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரெயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தத்தினை ரூ.21.16 கோடி மதிப்பில் மெம்கோ அசோசியேட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் வழங்கியது.

அதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் மெம்கோ அசோசியேட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் வீராகுமார் நேற்று கையொழுத்திட்டனர்.

இந்தநிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், துணை பொது மேலாளர் பாலமுருகன், மெம்கோவின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ்வா ராஜ்குமார் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து