சென்னை,
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 17ஆம் தேதியில் இருந்து காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.