தமிழக செய்திகள்

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.

போலீஸ் வீர வணக்கநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது வீர மரணமடைந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாலீசாருக்கு இந்த நாளில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த 189 உயிரிழந்த போலீசாருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு