தமிழக செய்திகள்

தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. நேரடியாக மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம். மராட்டியம், கொல்கத்தா போன்ற பகுதிகளில்போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்