தமிழக செய்திகள்

திருநங்கை வீட்டில் 21 சவரன் நகை, ரூ.1.80 லட்சம் பணம் கொள்ளை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி ஒருவர், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை லட்சுமி நகரைச் சேர்ந்த திருநங்கைகளின் தலைவி அன்புகோமதி (வயது 47), அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, மர்ம நபர்கள் பூட்டியிருந்த அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 சவரன் நகை மற்றும் ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு-டிஸ்கையும் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அன்புகோமதி அளித்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை