சென்னை,
நடிகர் கமலஹாசனின் பிப்ரவரி 21-ம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.
* பிப்ரவரி 21-ம் தேதி காலை 7.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லத்திற்கு வந்து உறவினர்களை சந்தித்து பேசுகிறார்.
* காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்.
* காலை 11.20 மணிக்கு அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
* நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் கமல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
* மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் அரசியல் கட்சி கொடியேற்றுக்கிறார். மாலை 6.30 மணிக்கு கமலஹாசன் பங்கேற்கும் பொதுக்கூட்டம் துவங்குகிறது. இரவு 8.10 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் 50 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
* வரும் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரையில் அரசியல் கட்சிக்கொடியை கமலஹாசன் ஏற்றுகிறார்.
* 21ம் தேதி 4 பெதுக்கூட்டங்களில் கமல் உரையாற்றுகிறார். ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பெதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.