தமிழக செய்திகள்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு திருப்பி விடுவது நியாயமில்லை -முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைவிட குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜனை திருப்பிவிட்டால், சென்னை போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்தோறும் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், விரைவில் 450 மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் உள்ளது.

ஆகையால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ஆக்ஸிஜனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து