தமிழக செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 228- காவல் ஆய்வாளர்கள் இட மாற்றம்- டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னையில் ஒரேநாளில் 228 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கையாக முதலில் 112 காவல் ஆய்வாளர்களும், தொடர்ந்து 116 காவல் ஆய்வாளர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.