சென்னை,
மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், டெஸ்ட் கிட்கள் அனைத்தும் திரும்ப அனுப்பப்படுவதால் அரசுக்கு எந்த ஒரு செலவும் இல்லை. தமிழக அரசு பெற்ற 24 ஆயிரம் டெஸ்ட் கிட்களும் திரும்ப அனுப்பப்படுகின்றன.
எஞ்சியுள்ள கொள்முதல் ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் லாபம் அடையும் முயற்சியை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். என்றார்.