தமிழக செய்திகள்

2 நாளில் 24,048 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாளில் 24,048 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

தினத்தந்தி

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாளில் 24,048 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

ஆதார் எண் இணைப்பு

தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் வீடுகள், விவசாய பம்பு செட்டுகள், குடிசை வீடுகள் மற்றும் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கியது.

சிறப்பு முகாம்கள்

ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை முகாம் செயல்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

24,048 பேர் இணைத்துள்ளனர்

நாகை மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட நாகை, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 கோட்டங்களில் 5,10,751 மின் இணைப்புகள் உள்ளன. நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 24,048 பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்