தமிழக செய்திகள்

25,240 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்

விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 25,240 பேர் எழுதினர். 665 பேர் வரவில்லை.

தினத்தந்தி

விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 25,240 பேர் எழுதினர். 665 பேர் வரவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தர்வு வருகிற 20-ந் தேதி முடிவடைகிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 53 மையங்களிலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 63 மையங்களிலும் ஆக மொத்தம் 116 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

நேற்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற்றது. 12,961 மாணவர்களும், 12,944 மாணவிகளும் ஆக மொத்தம் 25,905 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 12,430 மாணவர்களும், 12,810 மாணவிகளும் ஆக மொத்தம் 25,240 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

2.6 சதவீதம்

531 மாணவர்களும், 134 மாணவிகளும் ஆக மொத்தம் 665 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 2.6 சதவீத மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. மாணவிகளை விட மாணவர்களே அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுத வராமல் இருந்தனர். மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலதாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோவினை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்