தமிழக செய்திகள்

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை - ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை வழங்கும் திட்டத்தை சென்னையில் ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நிவாரணா நிதியின் 2வது தவணை ஜூன் 3ல் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார். 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன் 3 ஆம் தேதி துவங்கிவைக்கவுள்ளார். மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?