தமிழக செய்திகள்

தமிழகத்தில் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது

தமிழகத்தில் 615 மையங்களில் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் 10 லட்சத்து 65 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதற்கட்டமாக கோ-வின் செயலியில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த விருப்பம் தெரிவித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசிக்காக பதிவு செய்த 5.5 லட்சம் சுகாதாரத்துறை பணியாளர்களில், இதுவரை 1.98 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் 1.94 லட்சம் சுகாதார பணியாளர்கள் புனே சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியையும், 3,892 பேர் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரம் முன்கள பணியாளர்கள் 19,405 பேர், காவல்துறையினர் 9,789 பேர் என தமிழகத்தில் முதற்கட்டமாக இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 2-வது தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் 2 தவணைகளாக செலுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கட்டாயமாக 2-வது தவணை தடுப்பூசியை 28 நாட்களுக்கு பிறகு செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறைஇ தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஜனவரி 16 ஆன்று முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 3,126 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மொபைல் மூலம் குறுந்தகவல் அனுப்பி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 615 மையங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், முதல் தவணையின் போது செலுத்தப்பட்ட அதே தடுப்பூசி தான், இரண்டாவது தவணையிலும் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை