தமிழக செய்திகள்

2 வது மனைவி மீது சந்தேகம் -கொலை; குழந்தைகளுடன் கணவன் போலீசில் சரண்

தேனி அருகே, நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர், குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதிலும், இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி கல்யாணப்பிரியாவின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவமுருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்யாணப்பிரியா, துடிதுடித்து இறந்தார்.

இதையடுத்து, தனது இரண்டு குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த சிவமுருகன், நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சிவமுருகனின் வீட்டுக்குச் சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்த கல்யாணப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகளையும், சிவமுருகனின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...