தமிழக செய்திகள்

மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது

காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2400 மதுபாட்டில்கள்-சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2400 மதுபாட்டில்கள்-சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. வேனில் இருந்த ஒருவர், போலீசார் வாகன சோதனை செய்வதை சற்று தொலைவில் பார்த்து விட்டு வாகனத்தில் இருந்து இறங்கி ஓடினார்.

இதனை கண்டதும் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவர் வந்த சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

அப்போது சரக்கு வேனில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு 2,400 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும், அவர்கள் 3 பேரும் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி(வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால்(40), மேல பொன்னேரி மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜப்பா(32) என்பதும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இவர்கள் காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை சரக்கு வேனில் ஏற்றி தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் 2,400 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி பிடிபட்டவர்கள் கொடுத்த தகவல்களை காரைக்கால் பகுதி போலீசாருக்கு தெரிவித்து போலிமதுபான ஆலையை மூட வைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்