தமிழக செய்திகள்

டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திருச்சி மாவட்டம் கும்பக்குடியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 42). இவர் திருச்சி பொன்னேரிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மாலை பொன்மலைப்பட்டி டாஸ்மாக் கடை அருகே அவர் நடந்து சென்றபோது, 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500-ஐ பறித்துச்சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஹரிதாசிடம் பணத்தை பறித்துச்சென்றது, பொன்மலைப்பட்டி இளங்கோ தெருவை சேர்ந்த சுரேஷ் (28), சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த சையதுமொய்தீன் (25), திருவெறும்பூர் திருநகரை சேர்ந்த பாலமுரளி (24) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை