தமிழக செய்திகள்

எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

எண்ணூரில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எண்ணூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எர்ணாவூர் அருகில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார் கையசைத்து நிறுத்தியபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து தீவிர சோதனை செய்தனர். அதில் காரில் கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த திருவொற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தருண் கிருஷ்ணா (23), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள், ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்