தமிழக செய்திகள்

3 வங்கி கணக்குகள் முடக்கம்

அருப்புக்கோட்டையில் நர்சிங் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டதன் எதிராலியாக 3 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ், அதே கல்லூரி மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப தர வேண்டும். வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் கல்லூரி சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்குகளை முடக்க கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். இந்தநிலையில் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேசின் 2 வங்கி கணக்குகளும், அவரது மனைவியின் வங்கி கணக்கையும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...