தமிழக செய்திகள்

அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தேர்தலின்போது அதிக வாகனங்கள் பயன்படுத்தியது மற்றும் அனுமதியின்றி கட்சி அலுவலகத்தை திறந்தது உள்ளிட்டவை தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது கடந்த அதிமுக ஆட்சியின் போது 3 வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமைச்சர் பெரியகருப்பன் மீதான 3 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்