தமிழக செய்திகள்

கொரோனா நோயாளிகள் 3 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கம்

கொரோனா நோயாளிகள் 3 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின.

அதனைதொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2 மணி நேரமாக ஆக்ஸிஜன் வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகள் 3 பேரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவமனை டீன், மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் தெரிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்