தமிழக செய்திகள்

கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - கோர்ட்டு அனுமதி

கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 25-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று புழல் சிறை அதிகாரிகள் பலத்த போலீஸ் காவலுடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை கோர்ட்டின் 9-வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 1-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டி போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்