தமிழக செய்திகள்

சிறை அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி

வேலூரில் சிறை அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூர் பாகாயத்தில் உள்ள சிறை அலுவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் (ஆப்கா) ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறை அதிகாரிகளுக்கு 3 நாட்கள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது.

ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார்.

முகாமில் இயக்குனர் சந்திரசேகர் பேசுகையில், சிறையில் எந்த நேரத்திலும் அவசரகால நிலைஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் பணியாற்றும்போது புத்திசாலித்தனமாக அதை கையாள வேண்டும் என்றார்.

இந்த பயிற்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 35 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.