தமிழக செய்திகள்

விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு

விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

தினத்தந்தி

நரிக்குடி அருகே அ.முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராக்கப்பன். இவர் 2 வெள்ளாடுகள் வளர்த்து வந்தார். இந்த வெள்ளாடுகளை வீட்டின் அருகில் உள்ள வயலில் மேய்த்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்தநிலையில் இவரின் 2 ஆடுகளும், சண்முகம் என்பவரின் வெள்ளாடும் சேர்ந்து மேய்ந்து கொண்டிருந்தது. இந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தது. இதனால் அதிச்சி அடைந்த ராக்கப்பன் ஆட்டின் அருகே சென்ற போது ஆடுகள் விஷம் கலந்த அரிசியை தின்று இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராக்கப்பன் அளித்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிசியில் விஷம் கலந்தது யார்? எதற்காக வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து