தமிழக செய்திகள்

ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு

ஆவூர் அருகே 3 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் திருமாறன் (வயது 30), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் 25 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு திருமாறன் வீட்டிற்கு சென்றிருந்தார். இரவு 11 மணியளவில் தோட்டத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது 3 வெள்ளாட்டு கிடாக்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருமாறன் அளித்த புகாரின் பேரில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். ஆம்பூர்பட்டி நால்ரோடு, புதுப்பட்டி, பேராம்பூர், ஆவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போவது தொடர்கதையாக உள்ளது. எனவே போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து