தமிழக செய்திகள்

கோடை மழையால் 3 வீடுகள் சேதம்; 3 கன்றுக்குட்டிகள், 7 கோழிகள் செத்தன

கோடை மழையால் 3 வீடுகள் சேதம் அடைந்தன. 3 கன்றுக்குட்டிகள், 7 கோழிகள் செத்தன.

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. அக்னிநட்சத்திரம் நேற்று முன்தினம் மழையுடன் தொடங்கியது. இந்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-86, புதுக்கோட்டை-12, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-10, மழையூர்-2.60, கீழணை-57.80, திருமயம்-63, அரிமளம்-61.20, அறந்தாங்கி-9.40, ஆயிங்குடி-4, மீமிசல்21.20, ஆவுடையார்கோவில்-8, மணமேல்குடி-11, இலுப்பூர்-8.40, குடுமியான்மலை-15, அன்னவாசல்-4, விராலிமலை-6, உடையாளிப்பட்டி-41, கீரனூர்-19, பொன்னமராவதி-8.20, காரையூர்-30.60. இந்த மழையில் 3 வீடுகள் சேதமடைந்தது. மேலும் 7 கோழிகள், 1 மாடு, 3 கன்றுக்குட்டிகள் செத்தன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்