சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய தொகுப்பில் இருந்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
அந்த வகையில் புனேவில் இருந்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், 28 பெட்டிகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 430 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அவை பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.