தமிழக செய்திகள்

சொத்துப் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சொத்துப் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தினத்தந்தி

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் உள்ள ராஜிவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தனது மகள்கள் யுவராணி, நித்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கூலி வேலை செய்து வரும் முத்துமாரிக்கும் அவரது சகோதரர் ஆண்டவர் என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர் தொடர்ந்து முத்துமாரிக்கு தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முத்துமாரி தனது மகள்கள் இருவருடன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்