தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

திருவள்ளூர் அருகே 3 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன் (வயது 50). இவரது மனைவி மதி. இவர் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண், சந்துரு என 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழரசன் மற்றும் அவரது 2 மகன்கள் என 3 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களை தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வீட்டு வாசலில் சத்தம் கேட்கவே அவர்கள் எழுந்து வந்து பார்த்த போது 3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மளமளவென பரவிய தீயால் 3 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் யாரேனும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை