தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

பெரியகுளத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கைலாசப்பட்டியை சேர்ந்த சிவதேசிக்கு (வயது 25), கொடைக்கானலை சேர்ந்த பாபு (25), சிவசண்முகம் (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து