தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி

கோவைகோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக கடைவீதி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் சென்று விசாரணை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பதும், விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை ஆர்.ஜி.தெரு சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த எலெக்ட்ரீசியன் சூர்யா என்ற சூர்யகுமார் (வயது 31), தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட்டை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி முகமத் நிஷார் (22), சுக்கிரவார் பேட்டை உப்பாரா தெருவை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளி பாலகிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை